அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறைமுக போரை துவக்க சீனா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச தகவல் வெளியாகியுள்ளது.
சீன துாதரக அலுவலகங்களை எல்லாம் மூடுமாறு அமெரிக்கா முடுக்கி விட்டதை அடுத்து பதிலடி கொடுக்க நடவடிக்கையில் சீனாவும் இறங்கி உள்ளது.
‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை உலகிற்கு முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டதாகவும் அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பிடியில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது என்று சீனா மீது, அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் மறுப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாகவே தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுக்கின்ற வகையில், தனது 2போர் கப்பல்களை அமெரிக்கா அங்கு அனுப்பி வலம் வரவைத்தது.
இந்நிலையில் ஹூஸ்டன் நகரில் செயல்பட்ம் சீன துாதரக அலுவலகத்தை எல்லாம் அமெரிக்கா அதிரடியாக மூடியது. மேலும் அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்று அமெரிக்கா அறிவித்தது.
இதனிடையே அங்கு விஞ்ஞானி தலைமறைவு , அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன துாதரக அலுவலகத்தில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானியான டாங் ஜுவான் பதுங்கி உள்ளதாகவும், அவருக்கு சீன ராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதாக, திடுக்கிடும் தகவலை அமெரிக்கா கூறி வருகிறது..டாங் ஜுவான், சீன ராணுவத்துடன் தனக்கு இருக்கும் தொடர்பை மறைத்து,விசா மோசடி செய்து பெற்றதும், தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தலைமறைவாகிய இவர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை திருடும் மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் மூடு விழா தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதோடு இது குறித்து அவர் கூறுகையில்:கொரோனா வைரஸ் போன்ற பல விஷயங்களில், சர்வதேச சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சீனாவுக்கு எதிராக, கடும் நடவடிக்கைகள் இனியும் தொடரும். ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன துாதரக அலுவலகத்தை மூடுவதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.அடுத்ததாக, அமெரிக்காவின் மற்ற நகரங்களில் உள்ள சீன துாதரக அலுவலகங்கள் எல்லாம் மூடப்படும்.
அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் விதமாகவே இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து தொடரும். என்று அதிரடியாக கூறினார்.
அமெரிக்காவின் அடுத்தடுத்த அதிரடியான இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் சீனாவிற்கு கடும் கோபத்தை கோப்பளிக்க செய்துள்ளது.இதனால் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு மறைமுக போரை துவக்க சீனா தயாராகி வருவதாக, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…