சகுனியே மிஞ்சிட்டப்பா!:பங்காளிகளை எதிராக திருப்புகிறதா? சீனா
இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அங்கு பதற்றம் தணித்து அமைதி திரும்பவே மக்கள் விரும்புகின்ற நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை தன் பங்கிற்கு ஊற்றி விட்டோம் இனி மற்றவர்களும் ஊற்றட்டும் என்று ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவின் எல்லைப்பகுதி நாடுகளை எல்லாம் எதிராக திருப்ப சீனா சதி செய்து வருவதாக தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் தற்போது சீனாவின் கைப்பாவையாக மாறியதையும் அதன் துாண்டுதலால் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருவதை எல்லாம் அன்மைக்கால நிகழ்வுகளை கவனித்து வருபவர்களுக்கு விளக்கும்.
நேபாளம் இந்தியாவிற்கு எதிராக திடீரென எல்லைப் பிரச்னையை கொண்டு வருகிறது.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, புலெக் ஆகிய பகுதிகள் எங்கள் பகுதிகள் என்று நேபாளம் கூறியது. இது தொடர்பாக ஒரு புதிய தேசிய வரைபடத்தையும் சூட்டோடு சூடாக நேபாளம் வெளியிட்டது.
என்ன நேபாளம் திடீரென்று இவ்வாறு கிளம்புகிறது என்றால் காரணம் என்று பார்த்தால் குவிகிறது தகவல்கள் ; நேபாள நாட்டு பிரதமர் இருப்பவர் கே.பி.சர்மா ஒலி இவருக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிக்குள் எதிர்ப்பு வழுப்பெற்று எழுந்துள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து எந்நேரமும் தூக்கி எறியப்படலாம் எதிர்அலை உருவாகியுள்ள நிலையில், அதை திசை திருப்ப இந்தியாவுக்கு எதிரான கோஷத்தை கையில் எடுத்துள்ளதாகவும் கட்சிப் பதவி அல்லது பிரதமர் பதவி இவற்றில் எதையாவது ஒன்றை தக்க வைக்க இவ்வாறு எதிராக கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அவருக்கு எதிராக தன் கட்சியிலே பலத்த எதிர்ப்பு வலுக்கிறது. எதிர்ப்பு விஷயத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான, புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா, மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில் தான் என்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா சதி செய்கிறது என்ற ஒரு குண்டை போட்டு இந்தியா மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சரி நேபாளம் தான் இப்படி நோகடிக்கிறது என்றால் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும், நம் நாட்டுக்கு எதிராக எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பிலே இருப்பதை உலகமே அறிந்த ஒரு விஷயம் தற்போது அந்நாட்டு பிரதமராக இருப்பவர் இம்ரான் கான்;அங்கு இவருடைய பிரதமர் பதவி மீது, கத்தியானது கூர்மையாக தொங்கிக் கொண்டிருக்கிறது.
எந்த சூழலியிலும் ராணுவத்தின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.இந்நிலையில் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணம் இந்தியா தான் என்று குண்டி வெடிப்புக்கு என்று அவரும் ஒரு குற்றச்சாட்டு குண்டை போடவே என்னடா இவ்வாறு இரு எல்லை நாடுகளும் திடீரென்று இப்படி குற்றச்சாட்டு குண்டுகளை பொழிந்து வருகிறது என்று பார்த்தல் குண்டு போட திரியை திரித்தது சீனா தான் என்று தகவல் திரிந்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும்படியாக நேபாள பிரதமர் சர்மாவையும், அதே போல் இம்ரான் கானை வைத்து குடைச்சல் கொடுக்கவும் எல்லையில் இவ்வாறு எல்லா புறமும் புகைச்சலை ஏற்படுத்த சீனா துாண்டி விட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக என்று இல்லாமல் நேபாள பிரதமர், ஒலியுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பேசும்படி கட்டளை இட்டுள்ளது.சீனாவின் கட்டளைப்படி, இருவரும், இன்று தொலைபேசியில் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் சார்ந்த அல்லது பொதுவெளி பிரச்னைகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த பேச்சு, இந்தியா குறித்ததாகவே இருக்க வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது. சதி செய்தவதில் சகுனியே மிஞ்சிவிடுவான் போல இந்த சீனாக்காரன் என்று மக்கள் தங்களுக்குள் கிசுகிசுக்கின்றனர்.