போருக்குத் தயாரான ஜே 20வகைப் போர் விமானங்கள் !
விமானப்படையில் சீனா புதிதாகத் தயாரித்துள்ள ஜே 20வகைப் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுப் போருக்குத் தயாரான நிலையில் இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. சீனா அதன் விமானப்படைக்காக ஜே 20 வகைப் போர் விமானங்களைத் தயாரித்துள்ளது. இதுஎதிரிகளின் தரை இலக்குகளைக் குண்டுவீசித் தாக்கவும், வானில் போர்விமானங்கள் ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கவும் திறன் பெற்றது.
2016நவம்பரில் சுகாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் முதன்முறையாக இடம்பெற்ற இந்த விமானம், இப்போது விமானப் படையில் சேர்க்கப்பட்டுப் போருக்குத் தயாரான நிலையில் உள்ளதாகச் சீன மக்கள் ராணுவத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.