மத்திய மாநில அரசுகள் உதவினால் ஒலிம்பிக்கில் வெல்வேன்-கோமதி மாரிமுத்து
மத்திய மாநில அரசுகள் உதவினால் ஒலிம்பிக்கில் வெல்வேன் என்று தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,எனக்கு உணவு வேண்டும் என்பதற்காக என் தந்தை மாட்டிற்கு வைக்கும் உணவைக் கூட சாப்பிட்டிருக்கிறார்.அப்பா இப்போது உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார் .
மத்திய மாநில அரசுகள் உதவினால் ஒலிம்பிக்கில் வெல்வேன். இன்னும் ஓராண்டு இருப்பதால் என்னால் நல்ல பயிற்சி மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.