ஐடி பொறியாளர்களுக்கு அரசு வேலை.! டெல்லி, பெங்களூருவில் மொத்தம் 252 காலிப்பணியிடங்கள்.!

Published by
மணிகண்டன்

மத்திய அரசு மென்பொருள் துறையான C-DOT-இல் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் கீழ் செயல்படும் C-DOT எனப்படும் Center for Development of Telematics எனும் துறையில் ஐடி பொறியாளர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட பொறியியல் படிப்பு மற்றும் வேலைக்கு ஏற்ப அந்த துறையில் முன் அனுபவமும் பெற்று இருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பானது ஜூன் 3ஆம் தேதியன்று வெளியானது. இம்மாத கடைசி இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி திதியாகும்.

பதவிகள் :

மென்பொருள் பொறியாளர்கள் , RF பொறியாளர்கள், டெலிகாம் நெட்வொர்க் கள ஆய்வு பொறியாளர்கள், 4G மற்றும் 5G துறை பொறியாளர்கள், மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளர்,  தரவுத்தள பொறியாளர் என பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள் – 252 காலிப்பணியிடங்கள். (பெங்களூரு மற்றும் டெல்லி)

கல்வித்தகுதி :

  • குறைந்த பட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அந்தந்த பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பணிகளுக்கு தேவைக்கேற்ப முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்த பட்சம் 60 சதவீத தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்  – தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் வழங்கப்டும்.

வயது வரம்பு –

  • ஜூனியர் பொறியாளர்களுக்கு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • சீனியர் பொறியாளர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினருக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப வயது தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு.
  • நேர்முக தேர்வு.
  • சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பக் கட்டணம் – விதிமுறைகளுக்கு உட்பட்டது.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 03 ஜூன்  2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • C-DOT எனப்படும் Center for Development of Telematics எனும் துறையின் அதிகாரபூர்வ தளமான  www.igcrect.injoinindiannavy.gov.in -க்கு சென்று எந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உள்ளீர்களோ அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து, வரும் பக்கத்தில், பெயர், இணையதள முகவரி உள்ளிட்டவைகளை கொடுத்து புதிய கணக்கை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • பின்னர், உங்கள் கணக்கை கொண்டு உள்ளீடு (Log In) செய்து பின்னர் வரும் அப்ப்ளிகேஷனில் பெயர் , முகவரி உள்ளிட்ட அத்தியாவச தகவல்களை குறிப்பிட்டு அதற்கான உறுதியான ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.
  • இறுதியாக தேவை இருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர். இறுதி நகலை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயனர்களின் இணையதள முகவரி அல்லது தொலைபேசி எண்கள் மூலம் அழைக்கப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

33 minutes ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

37 minutes ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

2 hours ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

2 hours ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

3 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

4 hours ago