தமிழர்களின் உணர்வை எந்த காலத்திலும் மத்திய அரசு புரிந்து கொண்டதில்லை – கனிமொழி
திருக்குறளைப் படித்தால் காவிக்கும், திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள் கனிமொழி பேச்சு.
திமுக எம்.பி கனிமொழி அவர்கள், சென்னை கொண்டிதோப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழர்களின் உணர்வை எந்த காலத்திலும் மத்திய அரசு புரிந்து கொண்டதில்லை, இங்குள்ள ஆளுநர் உட்பட தமிழர்களின் உணர்வை புண்படுத்தி வருகின்றனர்.
மேலும், ட்விட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை பதவிட்ட பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி, திருக்குறளைப் படித்தால் காவிக்கும், திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள்; திருக்குறளை படிக்க வேண்டும். திருக்குறளுக்கான கருணாநிதி உரை தெளிவாக உள்ளது அதை படித்தாலே புரிந்து கொள்ளலாம் என தெரிவித்துளளார்.