இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் அணைத்து படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றே கூறலாம். ஏனென்றால், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக போகிறது.
அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
1.கோப்ரா
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2.லத்தி
நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லத்தி”. இந்த படத்தை நடிகர் ராணாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3.திருச்சிற்றம்பலம்
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
4.வெந்து தணிந்தது காடு
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
5.விருமன்
கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
6.பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விருமன், பிரின்ஸ் ஆகிய படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதால் எந்த படம் அதிக செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மட்டும் 6 பெரிய ஹீரோக்களின் படம் வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…