கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், பல நாடுகளில் இதன் காரணமாக கொரோனா மூன்றாம் மற்றும் நான்காம் அலைகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது மட்டுமே ஒரே ஆயுதம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச சலுகைகள் வழங்கப்படுவதுடன், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அலுவலகங்கள் வருவதற்கும், சம்பளம் பெறுவதற்கும் அனுமதி இல்லை எனவும், உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் இவர்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. எனவே பாகிஸ்தானில் உள்ள மக்கள் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் .
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…