வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைகிறாரா பிரபல தொகுப்பாளினி .!
பிக்பாஸ் வீட்டினுள் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல தொகுப்பாளினியான மகேஸ்வரி நுழைய உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஏற்கனவே இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த நிலையில் ,அதில் ஒருவர் எவிக்ட் செய்யப்பட்டார்.இந்த நிலையில் அடுத்ததாக பகல் நிலவு தொடரில் நடித்த அஸீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைவதாக கூறப்பட்டது .
ஆனால் அவரது தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் அஸீம் செல்வதில் தாமதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல தொகுப்பாளினி மகேஸ்வரி நுழைய உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.ஏனெனில் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பகிர்ந்த பதிவில் இன்னும் ஒரு சில தினங்களில் ஆச்சரிய செய்தி வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தங்கியுள்ள ஓட்டலானது பிக்பாஸ் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தி கொண்ட ஓட்டல் என்றும் கூறப்படுகிறது.எனவே அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக மகேஸ்வரி நுழைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது .இந்த வாரம் இதற்கான பதில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram