சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த பிரபலம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகர் அர்ஜய் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் ஷூட்டிங் தொடங்கவிருந்த படக்குழுவினரை ரஜினிகாந்த் வேண்டாமென்று கூறி தடை செய்து கொரோனா தொற்று முற்றிலுமாக முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளாராம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இளம் நடிகரான அர்ஜய் நடிக்கவுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அர்ஜய் விஷாலின் சண்டக்கோழி 2, நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#கந்தனுக்கு_அரோகரா ???? #அண்ணாத்த #சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்
Thank you for giving me this Golden opportunity #Thalaivar @rajinikanth sir @directorsiva sir , @vetrivisuals anna , @AntonyLRuben brother , @sunpictures & Team ????❤️ pic.twitter.com/W1sr04woOV
— ARJAI (@ActorArjai) July 23, 2020