லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் பிரபல பிக்பாஸ் பிரபலம்!
- லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் பிரபல பிக்பாஸ் பிரபலம்.
- நடிகை யாஷிகா ஆனந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் ஆர்.கே.பாலாஜி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை என்.ஜே.சரவணனும் இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஆர்.கே.பாலாஜி அவர்களே நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முழு கதையும் நடிகை நயன்தாராவை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.