கொரோனா பெயரை மாற்றினால் ரூ.100 கோடி கொடுக்க தயார்.! பிரபல பீர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

Default Image
  • கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பிரபல பீர் நிறுவனம் கொரோனா என்ற பெயரை மாற்றினால் ரூ.100 கோடி தர தயார் என்று அறிவித்துள்ளது.
  • கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது. இது பீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பிரபல பீர் நிறுவனம் கொரோனா என்ற பெயரை மாற்றினால் ரூ.100 கோடி தர தயார் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் இந்த வைரஸ் பல நகரங்களில் பரவி நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் விளைவு காரணமாக உலக நாடுகளிலுள்ள மக்களிடம் கொரோனா வைரஸ் என்ற பெயர் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பெயரை கேட்டாலே மக்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள் அந்த வகையில் கொரோனா பெயர் உலக முழுவதும் பரவியுள்ளது. இதனால் மெக்சிகோ நாட்டு தயாரிப்பான கொரோனா பீர் நிறுவனம் தங்கள் தயாரிப்புக்கு வைரசால் ஏற்பட்ட அவ்வப்பெயரை போக்க வழிதேடி கொண்டிருக்கிறது. கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது.

இது பீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்ற பெயரை இணையத்தில் தேடினால் கொரோனா பீரும் வரிசையில் நிற்கிறது. உடனே கொரோனா பீர் வைரஸ் என்று இந்த பீரை தொடர்புபடுத்தி இணையத்தில் பரப்பினர். கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் கொரோனா பியர் வைரஸ் என இணையத்தில் தேடுவோரின் எண்ணிக்கை பல கோடியாக அதிகரித்துள்ளது. கூகுள் தேடுதளத்தில் கொரோனா என டைப் செய்யும் போதே பரிந்துரைப் பட்டியலில் கொரோனா பீரின் பெயரும் சேர்ந்தே வரிசையில் காட்டியது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்தைச் சேர்ந்த மதுபான விடுதி, வெயில் நேரத்தில் கொஞ்சம் கொரோனா குடியுங்கள் என சர்ச்சையான விளம்பரத்தைக் கொடுத்தது. இதனால் அதிர்ந்து போன கொரோனா நிறுவனம் மேற்படி வைரசுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

பெயரில் உள்ள களங்கத்தை துடைக்கும் விதமாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கொரோனா பீர் நிறுவனம். அதாவது, கொரோனா என்ற பெயரை மாற்றினால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 கோடி தரத் தயார் என அறிவித்துள்ளது. இதுமட்டுமல்ல தங்களின் போட்டி நிறுவனங்கள் தயாரிக்கும் பட்லைட் (budlight) பியர் மற்றும் ஹெய்னெக்கென் பியர் பெயர்களை இந்த வைரசுக்கு சூட்டினால், கூடுதலாக ரூ.30 கோடியும், மொத்தமாக ரூ.100 கோடி தருவோம் என விளம்பரமும் செய்திருக்கிறது. மேலும் பியரில் இருக்கும் ஆல்கஹாலும் உடலுக்கு கெடுதல்தான் என்றாலும், கொரோனா அளவுக்கு நாங்கள் இல்லை என கூறுகிறது பீர் தயாரிப்பு நிறுவனம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்