இரண்டாவது திருமணத்தை சத்தமின்றி முடித்த பிரபல நடிகை.!
பிரபல நடிகையான சமீக்ஷா இரண்டாவதாக பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷாயல் ஓஸ்வாலுடன் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் நவ்தீப் நடிப்பில் ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் சமீக்ஷா. அதனையடுத்து மெர்க்குரி பூக்கள், மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ஊரடங்கில் பிரபல பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷாயல் ஓஸ்வாலுடன் தனது திருமணத்தை ஜூலை 3ம் தேதி சிங்கப்பூரில் நடத்தி முடித்துள்ளார்.
இது குறித்து நடிகை சமீக்ஷா கூறியபோது, ஷாயல் பாடிய மியூசிக் வீடியோவில் நடனமாடிய போது அவர் காதலிப்பதாக கூறினார். ஆனால் எனக்கு காதல் வராததால் நட்பாக பழகியதாகவும், அதனையடுத்து காதல் செய்ததாகவும், அவர் தனக்கு கணவராக கிடைத்ததில் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளார். தேரே நாள் என்ற பாடலின் படப்பிடிப்பிற்காக பிப்ரவரியில் சிங்கப்பூர் வந்ததாகவும், இங்கயே செட்டிலாகி விட்டதாகவும் கூறிய இவர், ஜூலை 3ல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட தாகவும், இனி நடிப்பிற்கு குட் பைய் சொல்லி விட்டு, எழுத்து, இயக்கம், தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஷாயல் என்பவருக்கு முதல் மனைவியில் 17வயது மகளும், 16வயதும் மகனும் உள்ளனர். மேலும் சமீக்ஷாவிற்கு முதல் திருமணத்தில் 10வயதில் மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தம்பதிகளுக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.