பிரபல கன்னட நடிகையான ஷர்மிளா மந்த்ரே மற்றும் அவரது சில குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான ஆர். என். மந்த்ரேவின் பேத்தியும், நடிகையுமான ஷர்மிளா மந்த்ரே கன்னடத்தில் பல படங்களை நடித்துள்ளார். தமிழில் ‘மிரட்டல்’ என்ற படத்தில் அறிமுகமாகினார். ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்பதால் கன்னட சினிமாவிலையே அதிகம் கவனம் செலுத்தினார். ஆனால் தமிழில் ‘சண்டக்காரி’, ‘நானும் சிங்கிள் தான் ‘,’ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கும் இவரது குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஷர்மிளா அறிவித்துள்ளார். அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது, எனக்கும் என் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், லேசான அறிகுறிகள் என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும், தானும் மருத்துவர்களின் அறிவுரையின் படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவர் தனது நண்பருடன் இணைந்து போலீசாரின் அனுமதியின்றி காரில் சென்று பெங்களூரில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…