குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பாராட்டிய பிரபல நடிகர்!

நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்கள் குக் வித் கோமாளி தான் தற்பொழுது தனது பொழுதுபோக்கு என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி அருகே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இடம் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக மாறி விட்டது என்றுதான் கூறியாக வேண்டும். ஏனென்றால் வருடம்தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப படும்பொழுது விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியுமே அதிகம் எடுபடாது, நாடகங்கள் கூட சோர்வடைந்த நிலையில் தான் ஓடும்.
ஆனால், பிக் பாஸ் என்ன பல நாடகங்கள் திருப்புமுனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அதிக அளவில் பலரையும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பாராட்டி தற்போது பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி மாறி விட்டதாகவும் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக செயல்படுவதாகவும், நம்மை மகிழ்வித்த அதற்காக அவர்கள் அனைவருக்கும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
#CookuWithComali has become my recent time stress buster! All the contestants are doing exceptionally well and i wish i could meet them all in person to thank them for the entertainment..keep rocking guys! Hats off to the creative team @vijaytelevision
— Harish Kalyan (@iamharishkalyan) January 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025