சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன்,எஸ்ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் நேற்று டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோ நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள், இதனால் தற்போது இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…