விஜயகாந்த் மறைவு…சினிமா பிரபலங்கள் இரங்கல்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. நேற்று (டிசம்பர் 27) இரவு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு, வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் சில பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025