இரண்டாம் உலகப்போர் வெற்றித்தின கொண்டாட்டம்.. இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பங்கேற்பு!

ரஷ்யாவில் உலகப்போரின் 75 ஆவது ஆண்டு வெற்றி தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, இந்திய இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
இரண்டாம் உலகப்போரின் 75 ஆவது ஆண்டு வெற்றி தினக்கொண்டாட்டம், ரஷ்யாவில் கொண்டாப்பட்டு வருகிறது. மே மாதம், 9 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த வெற்றி தின கொண்டாட்டம், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இந்த கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் ரஷ்யா வீரர்கள் சிறப்புமிக்க அணிவகுப்பு நடத்தினார்கள். அந்த அணிவகுப்பை பார்வையிட்டு, ராணுவ மரியாதையை அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் ஏற்றுக்கொண்டார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி, இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவ படைகளும் பங்கேற்றது.