காதலர் தினத்தை அல்வாவோடு கொண்டாடுவோம்….!!
காதலர் தினத்தில் அல்வா ஒரு முக்கியமான உணவு பொருளாக கருதப்படுகிறது. அனைவரும் அல்வாவை விரும்பி சாப்பிடுவது உண்டு. இப்போது அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நெய் – அரை கப்
- கோதுமை மாவு – அரை கப்
- சீனி – 1 கப்
- தண்ணீர் – 2 கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- முந்திரி – 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் நெய் ஊற்றி, நறுக்கிய முந்திரியை நெய்யில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே நெய்யில் அரை கப் கோதுமை மாவை போட வேண்டும். சிம்மில் வைத்து கையெடுக்காமல் 2-3 நிமிடம் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பின் கொதிக்க வைத்த தண்ணீரை 1 கப் ஊற்ற வேண்டும். பின் நன்கு கிளறிக் கொண்ட இருக்க வேண்டும். கோதுமை மாவு வெந்து கெட்டியான நிலைக்கு வரும்போது மீண்டும் 1 கப் வெந்நீர் ஊற்ற வேண்டும். பின் கிளற வேண்டும். கெட்டியான பிறகு, அதில் கப் சீனி சேர்க்க கிளற வேண்டும். அல்வா பொன்னிறத்தில் வரும் வரை கிளற வேண்டும். பின் சற்று ணெய் சேர்த்து கிளற வேண்டும். பின் முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி பின்பு ஆற வைத்து சாப்பிட வேண்டும். இப்பொது சுவையான அல்வா ரெடி.