கிறிஸ்துமஸ் பண்டிகையை அதிரசத்துடன் கொண்டாடுவோம்….!!!
கிறிஸ்தும பண்டிகையை இனிப்பான பலகாரங்களுடன் இனிமையாக கொண்டாட தான் அனைவரும் ஆசை படுவோம். நமது வீட்டில் பண்டிகை அன்று ஏதாவது இனிப்பான பலகாரங்கள் இருந்தால் தான் பண்டிகையே நன்றாக கொண்டாடிய ஒரு திருப்தி இருக்கும். நாம் அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- அரிசி மாவு – 500 கிலோ கிராம்
- வெள்ளபாகு – தேவைக்கேற்ப
- ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை :
பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லப்பாகை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பாகு போல தயாரித்து, கையில் ஒட்டாத அளவுக்கு சரியான பதில் தயாரித்து கொண்டு, பின் அதில் ஏலக்காய் போடி போட்டி கிளறி கொள்ள வேண்டும். பின் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக, கட்டி படாதவாறு போட்டு வெல்ல பாகையும், அரிசிமாவையும் அதிரசம் செய்வதற்கு ஏற்றவாறு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் வாழைஇலையில் எண்ணெய் தடவி கலவையை அதில் அதிரச அளவில் செய்து, பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதை எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். தற்போது சுவையான அதிரசம் தயாராகி விட்டது.