திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை
இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது என அண்ணாமலை அறிக்கை.
கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.
இதனையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை தொடர்பில் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாமலை அறிக்கை
இந்த நிலையில், அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் திமுகவிற்கு கைவந்த கலை. முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், “வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?” என்று கேட்டிருந்தேன்.
அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டிஜிபி திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சிபிஐ விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரியவரும்.நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.
மாநிலத் தலைவர்
வேண்டும் சிபிஐ விசாரணை“பத்திரிக்கைச் செய்தி”
நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது…
– மாநில தலைவர் திரு.@annamalai_k#Annamalai pic.twitter.com/QsfoAsgU4s
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 6, 2023