இங்கிலாந்தில் அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பூனை!
இங்கிலாந்தில் அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பூனை.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில், பாமஸ்டர்ன் என்று பெயரிடப்பட்ட பூனை எலி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தது. இந்த பூனையை கடந்த 2016-ம் ஆண்டு, பாட்டர்ஸியா பகுதியில் உள்ள நாய்கள், பூனைகள் காப்பகத்திலிருந்து எலி பிடிக்கும் பணிக்காக இங்கிலாந்து அரசு தத்தெடுத்தது.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை கொள்கையில் அதிக ஆதிக்கம் செலுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் லார்டு பாமர்ஸ்டனின் பெயர் வைக்கப்பட்டது. இந்த பூனை நான்கு வருடங்களாக, அரசுப் பணியில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது தன்னுடைய பணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளது.
இதுகுறித்து பூனையின் சசார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இனி நான் வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் பேச்சைக் கேட்க வேண்டியதில்லை. வெள்ளைச் சுவர்களுக்கு மத்தியில் சுற்றிக் கொண்டிருக்கத் தேவையில்லை. என்னுடைய ஓய்வுக் காலத்தை மரங்களின் மீது ஏறி உல்லாசமாகச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூனையை, ட்விட்டரில் மட்டும் 1,05,000 பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.