“டிக்கெட் எடுக்கலயா.. அப்ப வெளியே போடா!” ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பூனை!
ரயிலில் டிக்கெட் எடுக்காத பூனையை பாதுகாவலர்கள் வெளியே அழைத்து செல்லும் காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வடக்கு சீனா மாகாணத்தில் விரைவு ரயில் ஒன்று, புறப்பட காத்திருந்தது. அப்பொழுது ரயிலுக்குள் பூனை ஒன்று இருப்பதை கண்டறிந்த ரயில்வே பாதுகாவலர் ஒருவர், பூனையை ரயிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். இதனை ரயிலில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்தார்.
அதன்பின் அந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பாதுகாவலர் கூறுவது போல, “டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்க முடியாது” என குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில், இருக்கைக்கு கீழ் இருக்கும் பூனையின் கால்களை பிடித்து ரயிலுக்கு வெளியே சிறிது தூரத்திற்கு சென்று விட்டுவிடுகிறார்.
இந்த விடியோவை பார்த்த பலர், இதுதொடர்பாக நகைச்சுவை கருத்துக்களுடன் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.