முந்திரியில பக்கோடாவா…! எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!

மாலை நேரத்தில் வீட்டில் ஏதாவது மொறுமொறுப்பாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது என்று தான் தெரியாது. இன்று முந்திரி வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- முந்திரி
- அரிசி மாவு
- கடலை மாவு
- பச்சை மிளகாய்
- உப்பு
- மஞ்சள் தூள்
- வெங்காயம்
- இஞ்சி பூண்டு விழுது
- புதினா
- கறிவேப்பில்லை
- எண்ணெய்
செய்முறை
மாவு : முதலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு நன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கலவை : இந்த கலவையில் முந்திரியை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பொரியல் : கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கலந்து வைத்துள்ள முந்திரி பருப்பு கலவையை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான முந்திரி பக்கோடா தயார்.