சாய் பல்லவியின் மீது வழக்கு பதிவு.!? போலீசார் கொடுத்த விளக்கம்.!
தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சாய்பல்லவி. இவர் தற்போது ராணாவிற்கு ஜோடியாக தெலுங்கில் “விராட பருவம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு தீவீரமாக அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் “சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் சாய் பல்லவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள் . இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கொரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்” என்று தெரிவித்திருந்தார்.
இவர் பேசிய இந்த கருத்திற்கு பல ஆதரவுகளை, அதற்கு இணையாக விமர்சனங்களுக்கும் எழுந்தது. இதனையடுத்து, காஷ்மீர் பண்டிட்டுகளின் படுகொலையையும், பசு காவலர்களின் செயலையும் ஒப்பிட்டுப் பேசி நடிகை சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹைதராபாத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானது.
ஆனால், தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், சாய் பல்லவி மீது புகார் எதுவும் பதிவு செய்யவில்லை என்று ஹைதராபாத் போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.