டான் படக்குழு மீது வழக்குப்பதிவு.! படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்.?

அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதால் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்கு.
அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள்.
இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, சூரி, பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி ஆனை மழை அருகே விறு விறுப்பாக நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் தற்போது அனுமதியின்றி படப்பிடிப்பு படப்பிடிப்பில் ஈடுபட்டதாக படக்குழுவிற்கு 19,400 ரூபாய் அபராதம் விதித்து இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி உட்பட 17 பேர் மேல் வழக்குபதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025