பூக்களின் மீது நடந்து சென்றதால் நடிகை ரோஜா மீது வழக்கு திடீர் வழக்கு பதிவு.
தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர். தற்போது ரோஜா கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனது தொகுதியில் உள்ள பலருக்கு உணவுகளை வழங்குவதும், அவரே முன்னிறங்கி கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல உதவிகளை தனது தொகுதி மக்களுக்கு செய்து வருகிறார். இருப்பினும் இவர் தனது தொகுதியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றை திறந்து வைக்க செல்கையில், அவரை பூக்களை தூவி வரவேற்று பூக்களின் மீது நடந்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பலரும் இந்த கொரோனா ஊரடங்கு நெருக்கடி சூழலில் இதுபோன்ற ஆடம்பரம் எதற்கு என்று கூறி கண்டனம் தெரிவித்து வந்தனர்
இந்த நிலையில் இதனை குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்து, பூக்களின் மீது நடந்து சென்ற வீடியோவையும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞரான கிஷோர். தற்போது இதன் வழக்கு இன்று காலை நடைப்பெற்ற போது, இதனை குறித்து விளக்கம் அளிக்க கோரி ரோஜாவிற்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.. தற்போது இந்த விவாகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…