இந்தியாவில் பறக்கும் கார்கள்: ஸ்கைட்ரைவ் உடன் இணைந்த சுசுகி ..!

சுசுகி மோட்டார் மற்றும் பறக்கும் கார் நிறுவனமான(ஸ்கைட்ரைவ்) SkyDrive ஆகியவை இணைந்து பறக்கும் கார்களை ஆராய்ச்சி செய்து, தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதிலும் அவற்றின் முதல் இலக்கும் இந்திய வாகனச் சந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பறக்கும் கார் நிறுவனமான (ஸ்கைட்ரைவ்) SkyDrive தற்போது ஒரு சிறிய, இரண்டு இருக்கைகள் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை முழுமையாக தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த மாடலில் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுமா..? இல்லையா..? என்பது தெரியவில்லை. இருப்பினும், ஜப்பான் நகரம் உலக கண்காட்சியை நடத்தும் 2025 ஆம் ஆண்டில் ஒசாகாவில் ‘பறக்கும் கார்’ சேவையைத் தொடங்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
சுசுகி இந்தியாவில் முதலீடு:
சுசுகி சமீபத்தில் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் உற்பத்திக்காக 1.37 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தது.சுசுகி மோட்டார் இந்தியாவை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தளமாக நிறுவலாம். அதன் தேவை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும். கடந்த ஆண்டு நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக முந்தைய அறிக்கை கூறுகிறது.
மின்சார வாகனத்தில் கவனம்:
பறக்கும் கார்களை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதுடன் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கும் மாருதி சுசுகி முக்கியத்துவம் அளித்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025