சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எம்வி எஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளானது.
இந்த சரக்கு கப்பலில் இந்தியாவில் இருந்து நைட்ரிக் ஆசிட் உட்பட வேதிப்பொருட்களை 1,486 கண்டெய்னர்களில் ஏற்றிக்கொண்டு இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு நுழைவதற்கான அனுமதிக்காக 9.5 நாட்டிக்கல் தொலைவில் கடலில் நின்றுள்ளது. அந்த நேரத்தில் அதிலிருந்த வேதிப்பொருட்களின் காரணமாக திடீரென்று கப்பலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பலில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணம் செய்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட உடனே இலங்கை கடற்படை கப்பல்கள் தீ பற்றிய கப்பல் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த 25 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் சரக்கு கப்பலில் உள்ள தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், வேதிப்பொருட்கள் ஏற்றி வந்த கப்பல் என்பதால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் இந்திய கப்பற்படையும் விபத்துக்குள்ளான கப்பல் இருக்கும் இடத்திற்கு வந்து நெருப்பை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…