இந்த குரு பெயர்ச்சியில் தொழில் முன்னேற்றம் அடைய கூடிய ரசிகர்கள் !
குரு பார்த்தால் கோடி நன்மை கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குரு பார்த்தால் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் அவை அனைத்தும் விலகி சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.குரு பகவான் ஆண்டிற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
இந்நிலையில் விகாரி வருட பஞ்சத்தின் அடிப்படையில் குறு பகவான் ஐப்பசி மாதம் (28.10.19) தேதி பின்னிரவு குரு தேவர் பிரமதை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 3.14 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்நிலையில் 2019 முதல் 2020 ஆண்டு வரை வரும் குரு பெயர்ச்சியில் தொழில் ரீதியாக உச்சம் பெரும் ராசிகள் மேஷம் ,மிதுனம் ,கடகம் ,சிம்மம் ,கன்னி ,விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகும்.