இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயரின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர், காரை வாசனை மயமாக்கும் ஏர் ஃப்ரெஷ்னரை ஸ்பிரே செய்துள்ளார். பின்பு வழக்கமாக ஸ்பிரே செய்யும் அளவை விட மிக அதிகமாகவே ஏர் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார். பின்னர் காரில் சாதரணமாக அமர்ந்து கொண்டு சிகெரெட் புகை பிடிக்க நினைத்திருக்கிறார். இதை அடுத்து சிகெரெட்டை எடுத்து வாயில் வைத்தபடியே, லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக காரினுள் தீப்பற்றி மிக பெரிய வெடி சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என பலரும் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவித்த சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், ஏதோ பெரிய வெடிகுண்டு வெடித்தது போன்றே காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டதாக குறிப்பிட்டார். காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அருகில் இருந்த சில கட்டிடங்கள் குலுங்கின என்றார். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியும் காரினுள் இருந்த அந்த நபர் பெரிய காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அவர் பயன்படுத்திய கார் இந்த சம்பவத்தில் பலத்த சேதமடைந்தது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…