சோமாலியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்.! 20 பேர் பலி , 90 படுகாயம் .!

- சோமாலியா நாட்டில் உள்ள தலைநகர் மொகடிசுவில் கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் , 90 பேர் படுகாயம் அடைந்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சோமாலிய நாட்டில் உள்ள தலைநகர் மொகடிசுவில் இன்று காலை நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் அரசின் வரி அலுவலகத்தை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ,சோதனை சாவடியில் கார்களை பரிசோதனை செய்யும்போது திடீரென கார் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் தூதர்கள் தங்கி இருந்த தாக்குதல் நடத்தப்பட்டது அந்த தாக்குதலை அல்-ஷபாப் ஜிகாதி பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக கூறியது.இந்த தாக்குதலில் 5 இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025