கார் விபத்து – நடிகை யாஷிகா மீது வழக்குப்பதிவு.!

அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என யாஷிகா ஆனந்த் மீது மாமல்லபுரம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் இரண்டு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர் நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக கார் ஓட்டியது மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025