30கிலோ வரை எடையை குறைத்து ஹீரோ கணக்கில் மாறிய கேப்டன் மகன்கள்.!

Published by
Ragi

மித்ரன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர்கள் இருவருமே உடல் பருமனுடன் குண்டாக ஒரு சமயத்தில் இருந்தவர்கள் தற்போது சுமார் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் நூற்றுக்கணக்கான படங்களை தனது கர்வமான நடிப்பாலும், பேச்சாலும் கொடுத்தவர் தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். இவரது படங்களில் நல்ல கருத்துக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். அதனையடுத்து படங்களிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கினார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அரசியல் கட்சியிலிருந்து விலகியிருந்த இவர் சிலமாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தம்பதியருக்கு விஜய்பாஸ்கர்  மற்றும் சண்முகபாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

இதில் விஜயபாஸ்கர் அரசியலில் ஆர்வமுடையவர் என்பதால் தந்தையின் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மேலும் சண்முகபாண்டியன் அவர்கள் சினிமாவில் களமிறங்கியுள்ளார். முதலில் சுரேந்திரன் இயக்கத்தில் வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து ஒளிப்பதிவாளரான பி. ஜி. முத்தையா இயக்கத்தில் மதுரைவீரன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

தற்போது மித்ரன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர்கள் இருவருமே உடல் பருமனுடன் குண்டாக ஒரு சமயத்தில் இருந்தவர்கள் தற்போது சுமார் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர். தற்போது ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிய இந்த சகோதரர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

7 hours ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

8 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

9 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

10 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

10 hours ago