கேப்டன்சி டாஸ்க் : புதிய தலைவர் அறிவிப்பிற்கு முகம் சுருங்கி கைதட்டும் அர்ச்சனா.!
பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைத்து போட்டியாளர்களும் இந்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட இந்த வார தலைவராக அனிதா வெற்றி பெற்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 63 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கடந்த வாரம் கேப்டனாக ஜித்தன் ரமேஷ் இருந்த நிலையில் இந்த வார தலைவருக்கான டாஸ்க்கானது தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில் உள்ளது .
வழக்கமாக அந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்களில் மூவர் தேர்வு செய்யப்பட்டு தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் வெற்றி பெற்றவரே தலைவராக அறிவிக்கப்படுவார்.ஆனால் இந்த வாரம் தலைவர் போட்டிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.
அதன்படி அனைவருக்கும் டாஸ்க் வழங்க , இறுதியில் டாஸ்க்கில் அனிதா வெற்றி பெற்று இந்த வார தலைவராக அறிவிக்கப்படுகிறார் .உடனே பாலாஜி உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அர்ச்சனாவின் முகம் இந்த அறிவிப்பால் சுருங்குகிறது .மேலும் அனிதா இந்த வார தலைவராக இருப்பதால் நாமினேஷனில் இருந்து தப்பித்து அடுத்த வாரமும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்பது உறுதியாகிறது.
#Day64 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/pxnOQNYMFB
— Vijay Television (@vijaytelevision) December 7, 2020