தங்கம் வென்ற தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த கேப்டன் விஜயகாந்த்
கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தோஹா ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனைப்படைத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.