ஜெருசலேம் பாலஸ்தீனுக்கு தலைநகராமாக இல்லையென்றால் உலகத்தில் அமைதி நீடிக்காது!
பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் தொடர்ந்து நீடிக்கும் என பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் போராட்டம் வெடித்தது.
ட்ரம்ப்பின் அறிவிப்பையடுத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் அவசர மாநாடு இஸ்தான்புல்லில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்தார். மேலும் ஜெருசலேம் பாலஸ்தீனுக்கு தலைநகராம இல்லையென்றால் உலகத்தில் அமைதி நீடிக்காது என எச்சரித்துள்ளார்.