பேஸ்புக்கிடம் தன்னுடைய இருப்பிடத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை என்ற தேர்வினை ஒரு பயனர் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட அவரின் இருப்பிடத்தை தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்க செனட்டர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு செனட்டர்களால் தகவல் கேட்கப்பட்ட நிலையில் பேஸ்புக் நிறுவனம் அக்கடிதத்தை எழுதியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் செனட்டர்களுக்கு எழுதிய கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் பயனர்களின் இருப்பிடம் குறித்த விவரம் தெரிவதால் அருகாமையில் இருக்கும் வணிக நிறுவனங்கள் குறித்த தகவல்களை பயனர்களுடன் பகிர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் பயன்படுத்தும் ஒருவர் தனது இருப்பிடத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை என்றாலும் கூட கடைகள் அல்லது ஒரு இடத்தில் இருப்பதாக நண்பர்களால் டேக் செய்வதன் மூலமோ அல்லது பேஸ்புக்கின் ஷாப்பிங் பிரிவு மூலம், பின்னர் ஷாப்பிங் செய்யும் போது ஒரு முகவரியை கொடுத்தால் அதன் மூலம் பயன்படுத்துவோரின் இருப்பிடத்தை தெரிந்துக்கொள்ள முடியும், என்று பேஸ்புக் விளக்கமளித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஐபி முகவரியை வைத்து கூட இருப்பிடத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…