இந்த வாரம் ஆரியை நாமினேட் செய்ய முடியாது – அப்போ என்ன பண்றது பாலா?

இந்த வாரம் ஆரியை நாமினேட் செய்ய முடியாது என கூறியதும், கடந்த 15 வாரங்களாக தான் ஆரியை தான் நாமினேட் செய்தேன் இப்போ யாரை பண்ணுவது என பாலா அனைவர் முன்பும் கூறுகிறார்.
கடந்த 80 நாட்களுக்கு மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அனிதா கடந்த வார நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று நேற்று வெளியேறிவிட்டார். இந்நிலையில் ஆரி, பாலா, ஆஜீத், ஷிவானி, கேப்ரியெல்லா, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
இந்த வாரத்தின் துவக்க நாளாகிய இன்று போட்டியாளர்கள் ஓபன் நாமினேஷன் செய்கிறார்கள். ஆனால், இந்த வாரம் வீட்டின் தலைவராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் கூறியதும், கடந்த 15 வாரங்களாக ஆரியை தான் நாமினேட் செய்ததாகவும், இன்று புதிதாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமா எனவும் அனைவர் முன்பும் பாலா கூறிவிட்டார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram