அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று..!அச்சத்தில் மக்கள்..!
அமெரிக்காவில் தற்போது கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி பகுதியில் வியாழக்கிழமை அன்று இந்த தொற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் 101 பேருக்கும் டல்லாஸ் பகுதியில் 22 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நோய் பாதித்தவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு உடல்நிலை சரியாகவில்லை. இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை உள்ளது.
மேலும், இந்த பூஞ்சை தொற்று உடலில் ரத்த ஓட்டத்தை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவு ஆபத்தான தொற்றாக இருக்கிறது. மேலும், இந்த தொற்று காரணமாக அமெரிக்க மக்களிடையே புதிய பயம் ஏற்பட தொடங்கியுள்ளது.