டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையிலான விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில் ,அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.ஆனால் அதிபர் டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையே முதல் விவாதம் நடைபெற்ற பின்னர் அதிபர் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, காணொளி மூலமாக 2-வது விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்காக காணொளி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை என டிரம்ப் அறிவித்தார்.இந்நிலையில் தான் இரண்டாவது விவாதம் வருகின்ற 15- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…
காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க…
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…