Donald Trump vs Joe Biden : 2-வது விவாதம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

Default Image

டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையிலான  விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில் ,அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.ஆனால் அதிபர்  டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையே முதல் விவாதம் நடைபெற்ற பின்னர் அதிபர்  டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, காணொளி  மூலமாக 2-வது விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்காக காணொளி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை என  டிரம்ப் அறிவித்தார்.இந்நிலையில் தான் இரண்டாவது விவாதம் வருகின்ற 15- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது விவாதம் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Karur Bus Car Accident
GoodBadUglyTeaser
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram