அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடு ரத்து என அறிவிவிக்கப்ட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 6 ம் தேதி டிரம்ப் அரசு வெளியிட்ட புதிய விசா உத்தரவுப்படி, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக் கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.சமீபத்தில், விசா முடிவுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு அல்லது நிரந்தர தடை விதிக்க கோரி ஹார்வர்டு பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனமும் பாஸ்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
நேற்று இந்த வழக்கு தொடர்ப்பானவிசாரணை நடைபெற்றது அப்போது, அமெரிக்க அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அமெரிக்க குடியுரிமை துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட விசா தொடர்பான ஆணை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் 17 அமெரிக்க மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…