அமெரிக்கா கைவிட்ட நிலையில், கைகொடுக்கும் கனடாவின் விரைவு விசா திட்டம்!
அமெரிக்காவில் H-1B விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவின் விரைவு விசா திட்டத்தின் கீழ் இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் கனடாவை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் திறமையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கனடா பிரதர் ஜஸ்டின் ட்ரூடு அறிமுகப்படுத்தியுள்ள விரைவு விசா திட்டத்தின் கீழ் 10 நாட்களில் பணியமர்த்தும் நடைமுறைகளை முடித்துவிட முடியும் என்று கனடா நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அதிவிரைவு விசா மூலம் வருபவர்கள் 3 ஆண்டுகள் வரை தங்கவும், வசிப்பிடத்துக்கு விண்ணப்பிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை கனடாவுக்கு அதிகபட்சமாக 988 இந்தியர்கள் சென்றுள்ளனர்.
SOURCE : dinnasuvadu.com