சொந்த நாட்டில் செல்வாக்கை இழந்த கனடா பிரதமர்…???
கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களின் அன்புக்குரிய பிரதமராக இருப்பவர் . இவர் சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்திய விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டுமே சென்று வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் டெல்லி கனடா தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில், காலிஸ்தான் பிரிவினை பேசும் சீக்கியர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது மத்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து அந்த அழைப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இப்சோஸ் என்ற நிறுவனம் கனடாவில் கருத்துக்கணிப்பு நடத்தியது. தற்போது தேர்தல் வந்தால், யாருக்கு வாக்கு என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ஜஸ்டின் ட்ரூடோவின் லிபெரல் கட்சியை விட, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அதிக வாக்குகளை பெற்றது. இதற்கு இந்திய சுற்றுப்பயணமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ஜஸ்டினின் இந்திய பயணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக 40% பேர் வாக்களித்துள்ளனர். 16% பேர் நேர்மறை விளைவுகள் என்று வாக்களித்துள்ளனர். 54% பேர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு