கனடா நாடாளுமன்ற உறுப்பினர் மறுப்பு !ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை….
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ரண்தீப் சராய் இந்தியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிகழ்ச்சிக்குக் காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் குடும்பத்துடன் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மும்பையில்காலிஸ்தான் இயக்கத் தீவிரவாதி ஜஸ்பால் அத்வால் ஜஸ்டின் ட்ரூடோவுடன் விருந்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காலிஸ்தான் தீவிரவாதிக்கு இந்தியா வர விசா அளித்தது யார் என்றும், அவருக்கு கனடா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதா என்றும் வினாக்கள் எழுந்தன. இந்நிலையில் கனடா அரசு சார்பில் ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரண்தீப் சராய் தெரிவித்துள்ளார். 1986ஆம் ஆண்டு வான்கூவரில் அப்போதைய பஞ்சாப் மாநில அமைச்சர் மால்கியாத் சிங் சித்தைக் கொல்ல முயன்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜஸ்பால் அத்வால் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.