கனடா : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதால் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானம் நுழைவதற்கு அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சகம் தடை விதித்திருந்தது. இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கனடாவுக்குள் இந்திய விமானம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்பொழுது முடிவடையவுள்ள நிலையில், கனடாவுக்குள் இந்திய பயணிகள் விமானம் நுழைவதற்கான தடையை செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025