19 மாதக்குழந்தை மாஸ்க் அணியாததால் கனடா நாட்டு விமானம் ரத்து.!
19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் கனடாவில் வெஸ்ட் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சஃப்வான் சவுத்திரி என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கனடா நாட்டில் உள்ள கல்கரே விமான நிலையத்தில் இருந்து வெஸ்ட் ஜெட் விமானம் மூலம் வெளியூர் செல்ல சென்றுள்ளார்.
அப்போது, அவரது 19 மாத குழந்தை மாஸ்க் அணியாததால் விமான நிலைய ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான சேவை நிறுத்தப்பட்டு சஃப்வான் சவுத்திரி, அவரது மனைவி, அவரது 3 வயது குழந்தை மற்றும் 19 மாத குழந்தை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், இந்த வாக்குவாதம் காரணமாக சக பயணிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவே விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை சஃப்வான் சவுத்திரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Earlier today my family endure the most horrific & dehumanizing treatment onboard @WestJet plane. My wife was threatening to be arrested & forcibly removed unless my daughters, 3 yrs & 19 months would wear a mask. While my 3yrs wore her mask, the 19 months old was hysterical. pic.twitter.com/MHnaTnKgCU
— Safwan Choudhry (@SafwanChoudhry) September 9, 2020