கண்கலங்கி சிரியா மக்களை வரவேற்கும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே!

Default Image

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடே தனது அழுகையாலே சிரியா மக்களை வரவேற்றுள்ளார்.இது உங்களின் வீடு,வாருங்கள் என்று  கூறினார் .அகதிகளாக வரும் சிரியா மக்களை தானே விமானம் அனுப்பி
வரவேற்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Image result for canada pm tears in syria issue

உள்நாட்டு யுத்தத்தால் சிரியாவில்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கனடா நேசக்கரம் நீட்டியுள்ளது.

உள்நாட்டு போர் சிரியாவில்  மிகவும் உக்கிரம் அடைந்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் 800 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் சுமார் 5 லட்சம் பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கனடா  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே சிரிய அகதிகளை அரவணைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் கனடா  அதிகாரிகள் களம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டும் இதேபோன்று சிரிய அகதிகளை வரவேற்ற கனடா பிரதமர் தாயகத்திற்கு வரவேற்கிறேன் என அவர்களை வரவேற்று பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்