வெள்ளை முடி வராமல் தடுக்க இத பயன்படுத்தலாமா.?
வெள்ளை முடி வராமல் தடுக்க சிறந்த வழிமுறைகள் :
வெள்ளை முடி என்பது பொதுவாக வயது முதுமை காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே தோன்றுகிறது.ஆனால் சமீபகாலமாக இளம் வயதினருக்கும் வெள்ளை முடி வருவது இயல்பாகிவிட்டது.
இந்நிலையில் பொதுவாக வெள்ளை முடி உடலில் உள்ள சத்து குறைவினால் மட்டுமே தோன்றுகிறது.எனவே வெள்ளை முடி வராமல் தடுக்க முந்திரி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.அதை பற்றி பின் வருமாறு காண்போம்.
முந்திரி :
- முந்திரி பொதுவாக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது. முந்திரியை உள்ள இரண்டு ஆண்டி ஆக்கிஸிடண்டுகள் கண் பார்வை கூர்மை பெற உதவுகிறது.மேலும் முந்திரியில் வைட்டமின் பி சத்து உள்ளது.
- இந்த வைட்டமின் பி சத்து சோரோடோப்பின் என்ற ஒரு ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்க செய்கிறது.முந்திரி பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடுவதோடு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.
முந்திரி சாப்பிடுவதன் நன்மைகள் :
- தினசரி நான்கு முந்திரியை சாப்பிடுவதால் அதில் உள்ள காப்பர் மற்றும் இரும்பு சத்து உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்கிறது.
- மேலும் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் ,எலும்புகள் ,நரம்புகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதுகாத்து இவற்றின் செயல்திறனை அதிகரிக்கிறது.
- முந்திரியில் உள்ள ப்ரோன்தோசடியான் என்கிற மூலப்பொருள் புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றல் உடையது.
- இதில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.